இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க உதவுவதாக சுஷ்மா சுவராஜ் உறுதி: திருச்சி சிவா எம்.பி தகவல்

By செய்திப்பிரிவு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்காக இலங்கை யில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.

இது தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது, அவர்களை தாக்கு வது, படகுகளையும், மீன்பிடிப்பு சாதனங்களையும் சேதப்படுத்துவது, கைது செய்து அழைத்துச் செல்வது ஆகியவை தொடர்கதையாகிவிட்டன. இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக, புதுவை மீனவர்கள் சொன்ன கோரிக் கைகளின் பேரில், இலங்கையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்று சுஷ்மா சுவராஜிடம் மனு அளித்தோம்.

எங்கள் கோரிக்கைகளை கேட்ட சுஷ்மா சுவராஜ், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்பதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக் கப்படும். இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து பேசுவோம். இந்திய இலங்கை மீனவர்கள் பங்கேற்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்திய மீன்வர்கள் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் பங்கேற்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பு வசதியை ஏற்படுத்து வதற்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவானாலும் மத்திய அரசு செய்யும்” என்று கூறினார்.

சுஷ்மா சுவராஜின் வாக்குறுதிகள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. மீனவர் பிரச்சினைக்கு விரைவில் முடிவு ஏற்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

19 mins ago

சுற்றுலா

39 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்