புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி அன்னை தெரசா உருவம் பதித்த தங்க டாலர்களை வெளியிடுகிறது பிரின்ஸ் ஜுவல்லரி: லாபத்தை தொண்டு அமைப்புக்கு வழங்க முடிவு

By செய்திப்பிரிவு

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளதை யொட்டி, அவரது உருவம் பதித்த தங்க டாலர்களை பிரின்ஸ் ஜுவல்லரி வெளியிடவுள்ளது. ஒரு கிராம், 2 கிராம், 4 கிராம் எடை யில் 22 காரட் தங்கத்தால் செய்யப் பட்டவையாக இவை இருக்கும். இந்த டாலர் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை தொண்டு அமைப்புகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவுக்கு வாடி கனில் நாளை புனிதர் பட்டம் வழங் கப்படவுள்ளது. இத்தருணத்தில் அன்னையுடனான தனது நினைவு கள் குறித்து பிரின்ஸ் ஜுவல்லரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் பிரின்சிசன் ஜோஸ் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யுள்ளதாவது:

தேசிய கத்தோலிக்க மாநாடு 1993-ம் ஆண்டு லயோலா கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கான ஏற்பாடு களை அருட்தந்தை தம்புராஜு டன் இணைந்து நான் செய்திருந் தேன். அந்த மாநாட்டில் அன்னை யுடனான நிகழ்வுகள் என வாழ் வில் மறக்க முடியாத தருணங் களாகும்.

அன்னை தெரசா போன்ற புனித ரிடமிருந்து வாழ்த்து பெறும் பாக்கி யம் கிடைத்தது. கொல்கத்தாவில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிஸ் அமைப்புக்கு அடிக்கடி சென்று அவரை சந்தித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரின்சிசன் ஜோஸ் மகன் ஜோசப் பிரின்ஸ் கூறும்போது, “எனது தந்தையுடன் சென்று அன்னையை சந்தித்து ஆசி பெற்றபோது எனக்கு 5 வயது. அவரை சந்தித்து ஆசி பெற்றதை இப்போது மிகப்பெரிய பாக்கிய மாக கருதுகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

43 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

மேலும்