2 ஆண்டுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் இனி 2 ஆண்டு களுக்கு ஒருமுறை உலக முத லீட்டாளர்கள் மாநாடு நடத்தப் படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருப்ப தாவது:

தொழில் முதலீடுகளை ஈர்ப் பதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. புதிய முதலீடுகளை ஈர்ப் பதற்கும், எளிதில் தொழில் தொடங்குவதற்கும் உரிய சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெற வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த மாநாடு மகத்தான வெற்றியைக் கண்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்கள் பலவற்றின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்த அரசு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த உள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்