தினமும் 1.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் திருட்டு: கைதான வைத்தியநாதன் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

By செய்திப்பிரிவு

ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தது தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

விழுப்புரம், வேலூர், திருவண் ணாமலை உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து சென்னைக்கு வரும் ஆவின் டேங்கர் லாரிகளை திண்டிவனம் அருகே நிறுத்தி, பால் திருடியது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. திருடும் பால் அளவுக்கு டேங்கரில் தண்ணீர் கலந்துள்ளனர். இதில் தொடர்புடைய திருவண்ணாமலை சுரேஷ், சத்தியராஜ், ரமேஷ், ராணிப்பேட்டையைச் சேர்ந்த குணா, முருகன், சுரேஷ், அன்பரசன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்ணீர் கலக்கப்பட்ட பாலின் தரம் சரியாக இருப்பதாக தினமும் சான்றிதழ் அளித்த ஆவின் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீ ஸாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஒரு டேங்கர் லாரியில் இருந்து 1,500 முதல் 2 ஆயிரம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு, அதே அளவு தண்ணீர் ஊற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் தினமும் 83 லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் வரை பாலை திருடி தனியாருக்கு விற்றுள்ளனர். மேலும் 155 ஆவின் பூத்கள் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சென்னை அசோக்நகரைச் சேர்ந்த வைத்தியநாதன் (44) தலை மறைவாக இருந்தார். அவரை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் அவரை கைது செய்தனர். சிபிசிஐடி அலுவலகத் தில் வைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. இந்த கலப்பட மோசடிக்கு முக்கியப் பிரமுகர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அசோக் நகர் 55 வது தெருவில் உள்ள (எப்.8 மற்றும் எப்.12) வைத்தியநானின் 2 வீடுகளில் சிபிசிஐடி சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் 15 போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காலை 7.30 முதல் 11.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

இதைத் தொடர்ந்து வைத்திய நாதனை உளுந்தூர்பேட்டை நீதிமன் றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 1-ம் தேதி வரை விழுப்புரம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பால் கலப்பட விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக் கலாம் என கூறப்படுவதால் வைத்தி யநாதனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த விசா ரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த வைத்தியநாதன்?

கடந்த 2000-ம் ஆண்டு ஆவின் நிறுவனத்தின் சில்லரை விற்பனையாளராக பணியை தொடங்கியவர் வைத்தியநாதன். பின்னர், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு பிரிவு களில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு ஒன்றியங் களில் இருந்து ஆவின் நிர்வாகத் துக்கு பால் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றார். தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் இருந்தார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக 83 டேங்கர் லாரிகள் கூட்டுறவு ஒன்றியங்களில் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் சிறிய அளவில் பாலில் கலப்படம் செய்து வந்துள்ளார். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் ஏற்பட்ட நெருக்கத்தைத் தொடர்ந்து பெரிய அளவில் கலப்படம் செய்துள் ளார். இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, வைத்திய நாதன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சுற்றுலா

22 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்