சோனி நிறுவனம் - ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மற்றும் சோனி (இந்தியா) நிறுவனம் இணைந்து ‘Trees For Life’ எனும் வேளாண் காடுகள் உருவாக்கும் பணிகளை நேற்று தொடங்கின.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுக்கா, கயப்பாக்கத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ‘சோனி’ நிறுவனத்தின் தேசிய தலைவர் (மனித வளம் மற்றும் சமூக பொறுப்புணர்வு) சஞ்சய் பட்நாகர் முதல் மரக்கன்றை நட்டு இப்பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஈஷா தன்னார்வ தொண்டர்களுடன் ‘சோனி’ நிறு வனத்தின் சமூக பொறுப்புணர்வு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்ற ஆண்டு ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கான 7 நாள் பயிற்சி முகாமில் ஈஷாவுடன் சோனி நிறுவன் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா பசுமைக் கரங்கள் திட்ட மானது, ஈஷா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் திட்டமாகும். மரம் நடுவதன் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் மட்டும் 2.80 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் வெற்றிகரமாக நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.

2006-ம் ஆண்டு, ஒரே நாளில் 2.5 லட்சம் தன்னார்வ தொண்டர் களைக் கொண்டு 8,56,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனையில் இத்திட்டம் இடம் பெற் றது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார் விருது’ பசுமைக் கரங்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, அரசுடனும், தொண்டு நிறுவனங் கள், பள்ளி கல்லூரிகள், பெரு நிறுவனங்கள் போன்றவற்்று டனும் இணைந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பல முயற்சிகளில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் ஈடுபட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு 8903816461 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

34 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்