நாஞ்சில் சம்பத்தை நீக்கச் சொல்ல கே.பி.முனுசாமி யார்? - தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி

By செய்திப்பிரிவு

நாஞ்சில் சம்பத்தை கட்சியை விட்டு நீக்கச் சொல்ல கே.பி.முனுசாமி யார் என தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், சசிகலா, தினகரன் ஆகியோரின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி நேற்று தலைமைச் செயலகம் வந்தார். முதல்வர் அலுவலகம் சென்ற அவர், வெளியில் வந்தபோது செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நாஞ்சில் சம்பத் பற்றி ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி, பேசியதை அறிந்தேன். நாங்கள் டி.டி.வி.தினகரன் கைது செய்ததைக் கண்டித்து கூட்டம் நடத்தி வருகிறோம். நான் சொந்த செலவில் அந்த கூட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்ததாக கூறியுள்ளார். முடிந்துபோன முதியவர்கள் கொண்ட பன்னீர்செல்வம் கூட்டம் அல்ல இது.

நாஞ்சில் சம்பத்தும், நானும் இலக்கை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக் கிறோம். நாஞ்சில் சம்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார். யாரை யார் கட்சியில் இருந்து நீக்குவது. நீக்குவதற்கான தகுதியை பெற்றவர் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்தான். எங்கள் அரசு, முதல்வர், எங்கள் ஆட்சி இது. உங்களுக்கு பங்கே இல்லை. நீங்கள் ஓரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வேடிக்கை பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக இணைப்பு தள்ளிப்போகிறதே என்று கேட்டதற்கு, “வந்தால் இணைப் புக்கு வரவேற்போம். நாங்கள் தொடர்ந்து பின்செல்ல தயாராக இல்லை” என்று முதல் வர் பழனிசாமி சேலத்தில் கூறியுள்ளார்.

இணைப்புக்கு தடங்கலாக முனுசாமி இருக்கிறாரா என்று கேட்டதற்கு, “இணைப்புக்கு தடங்கலாக முனுசாமி இல்லை. முனுசாமி இருக்கும் வரை இணைப்பே நடக்காது”. சிறையில் இருக்கும் சசிகலா தன்னை யாரும் சந்திக்க வரவில்லை என வருத்தப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, சிறை விதிகள்படி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பார்க்க முடியும். அதனால்தான் அதிகமானவர்கள் சந்திக்கவில்லை. அதனால் அவர் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், செங்குன்றத்தில் ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது,‘‘ ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்தான் ’என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

10 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்