கருவேல மரம் ஒழிப்பு நிதிக்காக உயர் நீதிமன்றத்தில் தனி வங்கி கணக்கு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கருவேல மரம் ஒழிப்புப் பணிக்கு தேவையான நிதிக்காக உயர் நீதிமன்றத்தில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், தச்சநல் லூரைச் சேர்ந்த சங்கரநாராயணன், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோருக்கு கொலை வழக்கில் நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 9.1.2017-ல் தூக்கு தண்டனை வழங்கியது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி 7 நாள் தாமதமாக தம்பதி இருவரும் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த தாமதத்தை அனுமதிக்கக் கோரி (கண்டோன் டிலே) இருவரும் தனி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், “தாமதமாக மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டதற்காக ரூ.50 அபராதம் விதிக் கப்படுகிறது. இந்தப் பணத்தை உயர் நீதிமன்றக் கிளையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவ தற்கு தேவையான நிதி சேகரிக்கும் பொருட்டு தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மனுதாரர் கள் அபராதத் தொகையை அந்த கணக்கில் செலுத்த வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் விவசாயத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாவட்டங்களில் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இப்பணிக்கு தனியாக நிதி ஒதுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், இதுவரை நிதி ஒதுக்கவில்லை. இந்நிலையில், இதற்காக உயர் நீதிமன்றக் கிளை இந்தியன் வங்கியில் தனி சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

நேற்றும், நேற்று முன்தினமும் பல்வேறு வழக்குகளில் ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையை இந்த கணக்கில் செலுத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார். பல்வேறு வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சீமைக் கரு வேல மரங்கள் அகற்றும் நிதிக்கான வங்கிக் கணக்கில் செலுத்த அனைத்து நீதிமன்றங்களும் உத்தரவிட வாய்ப்பு உள்ளது என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்