இடையூறு ஏற்படுத்தும் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும்: மாநகராட்சிக்கு கண்காணிப்பு குழு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்றுவது குறித்த, மாநகராட்சி அலுவலர்களுடனான கண்காணிப்பு குழு கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத் தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகள் கண்காணிப்புக் குழு தலைவர், உயர் நீதிமன்ற முன் னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், உறுப்பினர்கள் பி.ஏகாம்பரம், ஏ.எஸ்.ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணை யர் தா.கார்த்திகேயன் முன்னிலை யில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்க ளுக்கு இடையூறு செய்யும் வகையிலும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்காக மண்டல வாரியாக குழுக் கள் அமைக்க வேண்டும். பதாகை களை அகற்றியது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பதிலுரை தாக்கல் செய்ய வேண்டும்.

திருவிழாக்கள், இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை தொடர் பாக வைக்கப்படும் விளம்பர பதாகைகளை, நிகழ்ச்சி முடிந்த உடன் அகற்றிவிட வேண்டும் என்று உறுதிமொழி அளித்த பின்னே, அனுமதிக்க வேண்டும். மண்டல அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள், தினமும் காலை ரோந்து சென்று, புது விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தால் அதை தடுக்க ஆவன செய்ய வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளை உடனடியாக அப் புறப்படுத்த வேண்டும் என கூட்டத் தில் அறிவுறுத்தப்பட்டது. மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

7 mins ago

இந்தியா

47 mins ago

கருத்துப் பேழை

40 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்