இந்து முன்னணி போர்வையில் சமூகவிரோதக் கும்பல்: துடியலூர் கடைக்காரர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

கோவையில் நடந்த வன்முறையில், இந்து முன்னணியினர் போர்வை யில் சமூகவிரோதக் கும்பல்களின் தாக்குதல்களும், சூறையாடல் களும் மிகுந்திருந்ததாக பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் உடல் கோவை அரசு மருத்துவமனையில இருந்து எடுத்துச் செல்லப்பட்டு சுப்பிரமணிய பாளையத்தில் உள்ள அவரது வீட்டை அடைந்தது. அஞ்சலி செலுத் தப்பட்ட பிறகு அங்கிருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு துடிய லூரை அடுத்துள்ள மின்மயானத் தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது துடியலூர் பகுதியில் கடைகள் சூறையாடல், தீ வைப்பு உட்பட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. இப் பகுதியில் நேற்று 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

உடைக்கப்பட்ட பல கடைகளைச் சேர்ந்தவர்கள் வேதனைக் குரல்கள் எழுப்பினர். ஒரு பேக்கரி அடித்து நொறுக்கப்பட்டு பலகாரங்கள், கண்ணாடிகள் சிதறிக் கிடந்தன. ‘எங்க கடைக்கு ஷட்டர் இல்லை. அதனால் பேப்பர் போர்டு போட்டு மூடியிருந்தோம். திடீரென்று ஒரு கும்பல் வந்து அடித்து நொறுக்கியது. ஒரு பொருள் கூட மிஞ்சவில்லை’ என்று வேதனையுடன் கூறினார்.

இங்குள்ள ஒரு செல்போன் கடையில் ஷட்டரை அறுத்து, தீ வைத்துக் கருக்கி உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வடஇந்திய இளைஞர்கள் என கடை உரிமை யாளர் தெரிவித்தார். அவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை பாக்கெட்டில் போட்டதோடு, மூட்டையாகவும் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இது அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றார். இப்படி பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் பலரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிவித் தனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்