ஜல்லிக்கட்டு போராட்டம்: கைதான 21 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைதான 21 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீஸார் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து சென்னையில் உள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராள மானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக் களை சேதப்படுத்தியதாக அரும்பாக்கம் போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக முகமது சலீம், சம்சத் அலி, முகமதுஉசேன், காந்தி, அன்பரசு உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது கைதான 21 பேரில் பலர் வட மாநிலத்தவர்கள். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்றாலே என்னவென்று தெரியாது என மனுதாரர்கள் தரப்பு வழக் கறிஞர் வாதிட்டார். இதற்கு பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நசீர் அகமது, மனுதாரர்கள் 21 பேருக்கும் நிபந் தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்