செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

செய்யாறு அகதிகள் சிறப்பு முகா மில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி உள்ள இலங்கை, வங்கதேசம், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மொத்தம் 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த மவு லானா (40) என்பவர் சென்னை விமான நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இருதய நோயால் பாதிக்கப்பட் டுள்ள அவர் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று காலை அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையில், அவருக்கு மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு மவுலானா அனுப்பிவைக்கப்பட் டார். அங்கு மருத்துவர் இல்லாததால் மீண்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் சுரேஷ் என்ற இலங்கை அகதி மாத்திரைகளை அதிக அளவில் சாப் பிட்டு தற்கொலைக்கு முயன்றுள் ளார். அவரை மீட்டு செய்யாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கள்ளத்தோணியில் தமிழகம் வந்த வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விரைவில் அவர் விடுதலை செய்யப்பட உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

இலங்கை அகதிகள் அதிக அளவிலான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்