பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை அறிமுகம் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் புதிய முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத் தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட விண் ணப்பத்தை உரிய ஆவணங்க ளுடன் இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பொறியியல் படிப்பில் சேர 2015-ம் ஆண்டு வரை அச்சடிக்கப் பட்ட விண்ணப்பங்களே வழங்கப் பட்டு வந்தன. ஆன்லைனில் விண் ணப்பிக்கும் வசதி இருந்தபோதும் அது மாணவர்களின் விருப்பத் துக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப் படுத்தியது. ஆன்லைனில் விண் ணப்பித்தவுடன் அதை பிரின்ட் அவுட் எடுத்து தேவையான ஆவ ணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பத்துக்கு உரிய கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்று இருந்தது. அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் உரிய கட்ட ணத்தை டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்தி விடலாம்.

இந்நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணத்தை ஆன் லைன் மூலமாக மட்டுமே செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, பொறியியல் படிப்புக்கு ஆன் லைனில் பதிவுசெய்யும் மாண வர்கள் அதற்கான கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகிறது. எனி னும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்தி ராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) ஆன்லைனில் பதிவுசெய்து வைத் துக் கொள்ளலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங் களைக் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்துவிடலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்து வைத்துக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்