சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8.8 கிலோ தங்கம் பறிமுதல்: மத்திய அரசு அலுவலர் உட்பட 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட மத்திய அரசின் பொதுப்பணித்துறை அலுவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.2.67 கோடி மதிப்புள்ள 8.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பயணிகள் போல் பயணம் செய்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், 6 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து கடந்த 10-ம் தேதி புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சென்னை மெயில் விரைவு ரயிலில் 6 பேர் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரு வாய் புலனாய்வுத் துறை அதிகா ரிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் சென்னை மெயில் வந்தடைந்தது. பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளில் தங்கம் கடத்தி வந்த 2 குழுவைச் சேர்ந்த 5 பேர் பிடிப்பிட்டனர். மேலும், அவர்கள் தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, ஷேக்முகமது, சசிகுமார் மற்றும் மோசா ஆகியோரிடம் தலா 166 கிராம் எடை கொண்ட 18 தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு குழுவை சேர்ந்த எஸ்.கிருஷ்ணன், ஹூசேன் முகமது ஆகியோரிடம் 35 தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப் பட்டன. மொத்தம் 8.8 கிலோ எடை கொண்ட தங்கத்தை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.67 கோடியா கும். இந்த கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில், எஸ். கிருஷ் ணன் என்பவர் மத்திய பொதுப் பணித்துறையில் பணியாற்றி வருகி றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

9 mins ago

உலகம்

11 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

46 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்