பாலியல் கொடுமை சட்டங்கள் இயற்றியும் தொடரும் பெண்களின் அவலங்கள்: இரும்பு கரம் கொண்டு அடக்க மாதர் சங்கத்தினர் வேண்டுகோள்

By வி.சீனிவாசன்

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றியும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிற அவலங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், அரசு சட்டத்தை கடுமை யாக்கி அதனை நடைமுறைபடுத்த வும் வேண்டும் என மாதர் சங்கத் தினர் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

பெண்களுக்கான பாதுகாப்பே கேள்விக்குறியாகும் வகையில் தமிழகத்தில் அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆத் தூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி யைக் கொலை செய்து, உடலை தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடி சென் றாயன்பாளையத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி பூங்கொடியை சீரழித்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறி யது. அச்சிறுமியை பாலின வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தோடு , கொலை செய்து தூக்கிலும் தொங்கவிட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் பா.ம.க-வைச் சேர்ந்த பூபதி, ஆனந்தன், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை ஏத்தாப்பூர் போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தொடரும் பாலியல் வன்முறை

ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், கெங்கவள்ளி உள்ளிட்ட கிராமப் புறங்களில், சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது என்கிற அதிர்ச்சி தகவலை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஐ.ஞானசுந்தரி தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் குறிப் பிட்டதாவது, ‘’ சேலம் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. சேலம் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண்ணை, கேபிள் வசூலுக்காக சென்றபோது வக்கீல் ஒருவர் பட்டபகலில் இழுத் துச் சென்று மானபங்கப்படுத்த முயன்றார். இது சம்பந்தமான புகா ரைப் பெற போலீஸார் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளனர். பின்னர் ஜாமீனில் எளிதில் வரக்கூடிய சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

போலீஸார் தயக்கம்

போலீஸார் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மீது 541-பி (பாலியலுக்காக கட்டாயப்படுத்துதல்) சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தயங்குகின்றனர். தவறு செய்பவர்களுக்கு சாதகமாக சட்டம் வளைந்து கொடுப்பதால், மீண்டும் மீண்டும் துணிச்சலாக தவறு செய்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவள்ளி உள் ளிட்ட இடங்களில் பெண் குழந்தை கள் பாலியல் வன்முறைக்கு உள் ளாகும்போது, அதற்குக் காரண மானவர்கள் மீது ஊர்க்கட்டுப்பாடு என்று சொல்லி பெற்றோரை போலீஸில் புகார் கொடுக்கவிடா மல் தடுத்து விடும் அவலமும் தொடர்கிறது. மீறி புகார் கொடுத் தாலும் வழக்கில் சிக்குபவர்கள் எளிதில் தப்பித்துக்கொள்கின்றனர். அதனால் பெண் வன்கொடுமைச் சட்டத்தில் உள்ள கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்க வேண்டும்‘’ என்றார்.

சேலத்தில் முதல் வழக்கு

சேலம் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் தேவகி கூறியதாவது:

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிறகு, தென் இந்தியாவில் சேலத்தில்தான் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செவ்வாய்ப்பேட்டை விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பாலின தொல்லை கொடுத்த ஆசிரியர் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குழந்தைகளை பாலின வன் கொடுமைக்கு உள்ளாக்கும் நபர்கள் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 73730 70711, 0427-2405966 தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்காத வகையில், அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்