தொலைதூரக் கல்வி படிப்பில் சேர ஜன.23 வரை காலஅவகாசம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வி திட்டத்தில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முது கலை, டிப்ளமா, முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

2017 ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி யுடன் முடிவடைந்தது. இந்த நிலை யில், மாணவர்களின் நலனை கருத் தில்கொண்டு, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் ஜனவரி 23-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இக்னோ பல் கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் அறிவித் துள்ளார். தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் ரூ.200. சென்னை அண்ணா சாலை நந்தனம் ஜி.ஆர். காம்ப்ளக்ஸில் (3-வது மாடி) உள்ள இக்னோ மண்டல அலுவல கத்திலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அதன் கல்வி மையங் களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் ஆன் லைன் மூலமாகவும் (www.online admission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு சென்னை மண்டல அலுவ லகத்தை 044-24312979, 24312766 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்