வார்தா புயலால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா பிப்ரவரி 10-ம் தேதி திறப்பு

By செய்திப்பிரிவு

வார்தா புயல் பாதிப்பால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 10-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் வீசிய வார்தா புயலில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. விலங்குகள், பறவை களின் அடைப்பிடங்கள் உள்ளிட் டவையும் பெரிதும் சேதமடைந் தன. இதையடுத்து, சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் பூங்கா கலவரையின்றி மூடப் பட்டது. பின்னர், சீரமைப்பு பணி கள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டன. விலங்குகள், பறவைகள் அதன் அடைப்பிடங்களில் அடைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புயலின்போது சேதமடைந்திருந்த பார்வையாளர் களுக்கான அடிப்படை கட் டமைப்பு வசதிகளும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன. உரிய அடைப்பிடங்களில் விலங்கு களை, பார்வையாளர்கள் காண் பதற்கான சூழலும் உருவாக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

இந்தியா

23 mins ago

கல்வி

44 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

52 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்