முல்லை பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் அத்துமீறல்: நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு

By செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணையில் கேரள மாநில நீர்பாசனத் துறை அதிகாரிகள் நேற்று அத்துமீறி நுழைந்து அணையின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த் தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் அணை பலம் இழந்துள்ளது, நீர் மட்டத்தை உயர்த்தக்கூடாது என அம்மாநில அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என்றும் கூறி வருகின்றனர். இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே கேரள வரு வாய்த் துறை அமைச்சராக இருந்த அடூர் பிரகாஷ், பீர்மேடு தொகுதி எம்எல்ஏ பிஜுமோள் ஆகியோர் தலைமையில் அதிகாரி கள் அணைப் பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்தனர்.

இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கேரள நீர் பாசனத் துறை செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையில் அதிகாரிகள் வல்லக்கடவு வழி யாக அனுமதி இன்றி முல்லை பெரியாறு அணையில் நேற்று அத்துமீறி நுழைந்தனர். அணை யின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்து குறிப்பெடுத்துச் சென்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் முல்லை பெரியாறு அணையின் செயற்பொறியாளரும், மத்திய துணைக் குழுவின் தமிழக பிரதிநிதி யுமான மாதவன் கூறியதாவது:

ஜார்ஜ் டேனியல் மத்திய துணைக் குழுவில் பிரதிநிதியாக உள்ளார். இவர் அம்மாநில அதி காரிகளுடன் அணைக்கு வரப் போவது குறித்து எங்களிடம் அனு மதி கேட்கவில்லை. பெரியாறு அணைக்கு செல்ல தமிழக பொதுப் பணித் துறையினரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்