விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வருக்கான பணி களை முறைப்படி அவர் தொடங் கினார். 500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல், பெண்கள் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்கப் படுமா?

குறுகிய காலத்திலேயே வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படும்.

கடந்த 2 மாதங்களில் ஏராள மான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக அரசு அங்கீ கரிக்குமா?

இதுகுறித்து ஏற்கெனவே சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிகாரப் பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளதே?

கடந்த 16-ம் தேதி நான் முதல்வராக பதவியேற்றதும் அண்ணா நினைவிடத்தில் செய்தி யாளர்களிடம் பேசும்போது இதைப் பற்றி தெரிவித்தேன். தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் பிரச்சினையை விரைந்து தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். நகரங்கள், புறநகர்ப் பகுதிகள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

பருவ மழை போதிய அளவு பெய்யாததால் இந்த ஆண்டு வறட்சி கடுமையாக இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க அரசு ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை?

நீங்களே வறட்சி என கூறிவிட்டீர்கள். வறட்சிக்கு காரணம் இயற்கை. அந்த இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விரி வான திட்டம் தயாரிக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மணல் விற்பனையை அரசே நடத்துமா?

நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் இப்போது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பதில் உள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின்போது மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட் டையன், திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

வணிகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்