அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By செய்திப்பிரிவு

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர் பாக அரசு பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக பத்திரப் பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு தடையைத் தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூன் 14-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப் படுத்துவது தொடர்பாக கடந்த மே மாதம் 2 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் வரைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நிபந்தனை கள் மற்றும் புதிதாக கட்டணங்களை விதித்தும், சந்தை மதிப்பை விட கட்டணத்தை அதிகரித்தும் உத்தரவிடப்பட்டது.

ஏமாற்று வேலை

இந்நிலையில் அரசின் இந்த உத்தரவு நடைமுறைக்கு சாத்திய மில்லாத ஒன்று. மேலும் தற்போது நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 33 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டு இருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை என குற்றம் சாட்டி, அந்த அரசாணைகளை ரத்து செய்யக்கோரி ரியல் எஸ்டேட் உரிமையாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று விசாரணை

இதேபோல, விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை கோரி ஏற் கெனவே வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திர னும், இந்த அரசாணைகள் செல்லாது. சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

11 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

47 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

14 mins ago

தொழில்நுட்பம்

5 mins ago

தமிழகம்

41 mins ago

மேலும்