பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உ.பி. உள்ளிட்ட மாநில தேர்தல்களில் பாஜக.வின் வெற்றி பாதிக்காது

By செய்திப்பிரிவு

மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றி பாதிக்காது என்று சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் தொடக்கத்தில் மக்களுக்கு சற்று சிரமம் இருந்தது. இப்போது நிலைமை சீரடைந்துள்ளது. இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் மக்களுக்கு பெரும் நன்மை கிடைக் கும். இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றி பாதிக்காது.

கலப்புத் திருமணத்தை ஊக்கு விக்க வழங்கப்பட்டுவரும் ரூ. 2. லட் சத்து 50 ஆயிரம் உதவித் தொகையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சமூக நீதியை பேணிக்காக்க மாநில அரசு கள் கலப்புத் திருமணம் அதிகம் நடைபெறும் மாவட்டத்தை கண்ட றிந்து அந்த மாவட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவருக்கு நிலம் அல்லது வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச் சகம் மாநில அரசுகளுக்கு விரைவில் கடிதம் எழுதும்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற கவுரவக் கொலை கவலை அளிக்கிறது. இப் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களி டையே உள்ள கருத்து வேறுபாடு களைக் களைந்து இந்த கொடூர சம்பவங்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம். 2011 ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 16.6 சதவீதம் இடஒதுக்கீடு தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்கும், பழங்குடி யினருக்கு 8.4 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 52 சதவீதமும் ஆக மொத்தம் 77 சதவீதம் இட ஒதுக்கீடு இந்த சமுதாயத்தினருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது இந்த சமுதாயத்தினருக்கு வெறும் 49.5 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு அரசிய லமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதால் இதுகுறித்து பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆதரவு திரட் டப்படும். அனைத்து விளையாட்டு களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டால்தான் ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.

உத்தரப்பிரதேச மாநில சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுடன் எங்கள் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து பாஜக தலைவர் அமித்ஷாவுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளோம். அம்மாநிலத்தில் 10 முதல் 15 இடங் களில் போட்டியிட கோருவோம். இல்லாவிட்டால் 200 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம். மற்ற தொகுதிகளில் பாஜகவை ஆத ரிப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்