மாணவர் நலனுக்கு திமுக குரல் கொடுக்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

மாணவர்கள் நலனுக்காக திமுக குரல் கொடுக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, திமுக இளை ஞரணி அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

கடந்த 2007-ம் ஆண்டு நெல் லையில் நடந்த இளைஞரணி மாநாட்டில், இளைஞரணி அறக் கட்டளைத் தொடங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடிக் கும் மாணவர்களுக்கு, 8-வது ஆண்டாக பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் 280 மாணவர் களுக்கு ரூ.31 லட்சத்து 15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பொறுப்புள்ள எதிர்க் கட்சி

கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக நுழைவுத் தேர்வு ரத்து, பாகுபாடின்றி கல்வி பயில சமச்சீர் கல்வி என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக, மாணவர்கள் நலனுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, நேற்று முன்தினம் மாலை திருப்பூருக்கு வந்த ஸ்டாலின், டெல்லியில் உயிர் இழந்த மருத்துவர் சரவணனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர் களிடம் கூறும்போ து, “மருத்து வர் சரவணன் உயிரிழந்த விவ காரத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. மர்மங்கள் விலக, வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என, ஏற்கெனவே திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்