வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து நாளை (21-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து 21.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.

இதனால், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,09,620 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்