பேரறிவாளன், சாந்தன் முருகனை விடுவிக்க கி.வீரமணி கோரிக்கை

By செய்திப்பிரிவு

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தணடனையை ஆயுள் தண்டனையாக்கியது போல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் முருகன் ஆகிய மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "வீரப்பன் கூட்டளிகளான மீசை மாதைய்யா, பிலேந்திரன், சைமன்,ஞானப்பிரகாசம் ஆகிய நால்வர் உட்பட இந்தியா முழுவதும் 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படிருக்கும் தீர்ப்பு சிறப்பு வாய்ந்தது.

தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் தூக்கு கயிற்றின் நிழலில் வாழ்ந்த அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு அவசியமான ஒன்று. இந்த தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் போற்றுதலுக்குரியது.

இந்தத் தீர்ப்பானது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கும் பொருந்தும்.

பல ஆண்டுகளாக தூக்கு கயிற்றின் நிழலில் வாழ்பவர்களின் மனநிலையை யோசித்து பார்க்க வேண்டியது அவசியம்.

அந்த வகையில் வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பாகும். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகளின் மனம் திறந்த பேட்டிக்கு பின்னர் அந்த வழக்கு மறு ஆய்வுக்குரியது என்பது புலனாகிறது.

எனவே நமது குற்றாவியல் சட்டத்தின் அடிப்படையை பின்பற்றி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வேண்டும்" என்று வீரமணி கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்