இயற்கை எரிவாயு திட்டத்துக்கு தடை கோரி பெட்ரோலிய அமைச்சருடன் கனிமொழி, திருச்சி சிவா சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அமைச் சரிடம் கனிமொழி, திருச்சி சிவா வழங்கினர்.

இதுகுறித்து திருச்சி சிவா ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் வாயு எடுக் கும் திட்டத்தை கைவிட வலி யுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடர் போராட்டம் நடந்து வருவதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விளக்கமாக எடுத்துக் கூறினோம்.

இந்தத் திட்டத்தின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி இது வளர்ச்சிக்கான திட்டம். குஜராத் போன்ற மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது என எங்களிடம் அவர் வாதிட்டார். குஜராத் போன்ற மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட முடியாது. நீர்வளம் குறைந்த தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் போன்ற ஒரு சில பகுதிகள் மட்டுமே வளமானவை. இந்த வளமான பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதை பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

மக்களின் எதிர்ப்பு ஜல்லிக்கட்டு போராட்டம் போல மிகப்பெரிய அளவில் மாறும் நிலை உள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமைச்சர், ‘‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமல்ல’’ என தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்