தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

By செய்திப்பிரிவு

தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நீராடினர்.

அமாவாசையன்று முன்னோர் களுக்கு பசியும், தாகமும் அதிக மாக ஏற்படும் என்றும் முன்னோர் களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும், நீரும் கிடைக்கும் என்றும் இந்துக்களால் நம்பப்படுகிறது. ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலையே ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப் பட்டு சிறப்புப் பூஜைகள் நடை பெற்றன. அதைத் தொடர்ந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தின அம்மன், ராமர், பிள்ளையார், முருகன் பவனி கோயிலில் இருந்து புறப்பட்டு அக்னி தீர்த்தக் கடற்கரை வரை நடைபெற்றது.

பின்னர் அங்கு கூடியிருந்த பல் லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, அக்னி தீர்த்தக் கடலிலும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடினர்.

சேதுக்கரை

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதப் பெருமாள் கோயிலில் தை அமாவாசை தினத்தில் வழங்கப் படும் பாயசத்தை குடித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் சேதுக் கரையில் நீராடிவிட்டு பாயச பிரசாதத்தை பெருவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தேனி மாவட்டம் சுருளி அருவி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முல்லை ஆற்றின் கரையோரங்களில் பலர் தங்களது முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் கொடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்