போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் நாளை பணிக்கு திரும்ப வேண்டும்: பார் கவுன்சில் தலைவர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் பொதுக்குழுக் கூட்டம் சென்னை யில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் கூறியதாவது:

வழக்கறிஞர் சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உயர் நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதை ஏற்று, வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு திங்கள்கிழமை (நாளை) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும். இதுதொடர்பாக 10 வழக்கறிஞர் சங்கங்களுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி யிருந்தோம். அந்த சங்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது. தமிழ்நாடு, புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட் டத்தைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

விதிகள் திருத்தம் குறித்து ஆராய 5 நீதிபதிகள் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைப் பதாக கூறியுள்ளது. அக்குழுவிடம் எங்கள் கோரிக்கைகள் குறித்து முறையிடுவோம்.

ஆண்டுக்கு 4 கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றுதான் பார் கவுன்சில் விதி உள்ளது. என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர விதிகளில் இடம் இல்லை. இதுசம்பந்தமான கோரிக் கைகள் செல்லாது என்பதால் அவை நிராகரிக்கப்பட்டது.

வழக்கறிஞர்களின் நலனுக்கு விரோதமாக பார் கவுன்சில் செயல் படாது. பார் கவுன்சில் அதிகாரமும் பறிபோகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்