ரூ. 2.60 கோடியில் ராயகோபுரம் புராதனச் சின்னம் சீரமைப்பு: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நிறைவேற்ற மாநகராட்சி தீர்மானம்

By செய்திப்பிரிவு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 2.60 கோடியில் ராயகோபுரத்தை மறுசீரமைக்க மாநகராட்சி கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாநகராட்சி சிறப்புக் கூட்டம், ஆணையரும், தனி அலுவலருமான சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி 12-வது வார்டில் உள்ள வெள்ளி வீதியார் ஆரம்பப் பள்ளியில் ரூ.23.82 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவது, டோக்நகர் பிரதான சாலையில் ரூ. 35 லட்சத்தில் தார்ச் சாலை, மணலூர் 5 எம்.எல்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பொருள் கொண்டு செல்ல ஏதுவாக ரூ. 49.50 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத பகுதியாக, நூறு வார்டுகளையும் அறிவிக்கும் நோக்கத்துடன் தனியார் நிறுவனங்கள் மூலம் தனி நபர் இடங்களில் 505 கழிப்பறைகள் ரூ.62 லட்சத்தில் கட்டுவது என மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொலிவான நகர் திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) ரூ. 2.60 கோடியில் ராயகோபுரம் புராதனச் சின்னத்தை மறுசீரமைப்பு மற்றும் புனரமைக்கவும், இப்பணியை மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியம் 50:50 என்ற விகிதத்தில் மேற்கொள்வதற்கு நகராட்சி நிர்வாக ஆணையரின் நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவும், மாநகராட்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களை சமுதாய சுகாதார மையங்களாக (24 மணி நேர மருத்துவமனை) தரம் உயர்த்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ. 1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக செல்லூர், அன்சாரி நகர், கோ.புதூர் ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.45 லட்சம் பெறப்பட்டு இந்நி தியை பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப. மணிவண்ணன், நகர் பொறி யாளர் மதுரம், உதவி ஆணையர் (கணக்கு) கருப்பையா, நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெ ங்கநாதன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

புதுமண்டபக் கடைகள் மாற்றம்?

புதுமண்டபத்தில் பாத்திரக் கடைகள், புத்தகக் கடைகள், திருவிழா ஆடை தையல் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள், வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த மண்டபத்தில் பழமையான கலைநயமிக்க சிற்பங்கள், தூண்கள் உள்ளன. மண்டபத்தில் இருக்கும் கடைகள், இந்த கலைநயத்தை மறைப்பதால் சுற்றலாப்பயணிகள் இவற்றை பார்த்து ரசிக்க முடியவில்லை. இந்தக் கடைகளை இடமாற்றி ஆயிரம்கால் மண்டபம் போல் காட்சிக்கூடமாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, ரூ. 6.48 கோடி மதிப்பில புதுமண்டபம் பகுதியில் உள்ள கடைகளை, குன்னூர் சத்திரத்துக்கு மாற்றி அங்கு கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால், புது மண்டபம் கடைகள் இடமாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்