உயிரிழந்த மற்றும் காணாமல்போன மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி

By செய்திப்பிரிவு

மீன்பிடிக்கும் போது உயிரிழந்த மற்றும் படகு கவிழ்ந்து காணாமல் போன 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை தண்டையார்ப் பேட்டை வட்டம், வஉசி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன், ராஜி இருவரும் கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகு உடைந்து நீரில்மூழ்கியதில் காணாமல் போய் இதுவரை வீடு திரும்பவில்லை.

காசிமேடு சிங்காரவேலர் தெருவைச் சேர்ந்த மில்கியாஸ், அவரது மகன் சகாயராஜ் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ஆந்திரா நோக்கி படகில் சென்ற போது, 17-ம் தேதி படகு உடைந்தது. இதில், மில்கியாஸ் இறந்த நிலையில் உடல் கிடைத்தது. சகாயராஜ் இன்னும் வீடு திரும்பவில்லை.

மில்கியாசின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். காணாமல் போன, சகாயராஜ், சரவணன், ராஜி ஆகியோர் குடும்பங்களில் வறிய நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப் படும். இவ்வாறு முதல்வர் அறிக் கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 mins ago

க்ரைம்

10 mins ago

இந்தியா

24 mins ago

சுற்றுலா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்