கூவத்தூரில் தங்கி இருப்பது ஏன்?- அமைச்சர் நிலோபர் கபில் விளக்கம்

By செய்திப்பிரிவு

எதிர்க்கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகள் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

கூவத்தூரில் புதன்கிழமை அன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' 124 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. யாரும் எங்களை இங்கு அடைத்து வைக்கவும் இல்லை.

நான் முஸ்லிமாக இருந்தாலும் எனக்காக தனி மரியாதை தருவதுடன், 5 மணி நேரம் தொழுகை நடத்துவதற்காக தனி இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நாங்கள் ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எம்.எல்.ஏ. விடுதியில் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இருந்தாலும் இங்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகள் இருப்பதுடன் எதிர்கட்சிகள் மற்றும் எதிரிக்கட்சிகள் எங்களுக்கு தொல்லை தராமல் இருப்பதற்காகவும்தான் நாங்கள் இங்கு தங்கியிருக்கிறோம். காவல்துறை அதிகாரிகள் எங்களது பாதுகாப்பிற்காகத்தான் வந்தனர்'' என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்