கட்சியை குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார் சசிகலா: கருப்பசாமி பாண்டியன் தாக்கு

By செய்திப்பிரிவு

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்ததை எதிர்த்து அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரனை நியமித்து சசிகலா உத்தரவிட்டார். தினகரனை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா நீக்கினார்.

இந்த நிலையில், கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கட்சியில் சேர்த்ததுடன் ஒரே நாளிலேயே அவரை துணை பொதுச் செயலாளராகவும் நியமித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

எதிர்ப்பை பலமாக தெரிவிக்கும் வகையில் முதல் நபராக பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கருப்பசாமி பாண்டியன்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் கூறும்போது, "ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். அதிமுக என்ற கட்சியை சசிகலா குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்