சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறிய பெண் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகியோர் தங்களை துன்புறுத்தியதாக, அவர்களது வீட்டில் வேலை செய்த, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடியைச் சேர்ந்த சகோ தரிகள் இருவர் புகார் அளித்தனர். சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், புகார் கொடுத்த பெண்கள் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன், போலீஸ் நிலையத்துக்கு ஒரு கடிதம் வந் தது. அதில், ‘‘சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது, சிலரது தூண்டுதலின் பேரில் நாங்கள் பொய் புகார் கொடுத்து விட்டோம். அந்தப் புகாரை வாபஸ் பெறுகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்கடிதம் உண்மையானது தானா என்பதை உறுதி செய்ய இருவரும், போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. புகார் கொடுத்த சகோதரிகளில் மூத்தவர், நேற்று மாலை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில், நீதிபதி அண்ணாமலை முன்னிலை யில் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘சசிகலா புஷ்பா எம்பி மீதான புகாரை வாபஸ் பெறுவதாக நானும், எனது சகோதரியும் போலீஸாருக்கு கடிதம் அனுப்பினோம். இந்நிலையில், எனது சகோதரியை கடந்த 1-ம் தேதி முதல் காணவில்லை. அவரை மீட்க வேண்டும். இதேபோல், என்னை யும் கடத்தி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதன் மீதான விசாரணை வரும் 6-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்