சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், ஜெயலலிதாவுக்கு தான் கொடுத்த வாக்குறுதியான 'அரசியலில் என்றும் ஈடுபடமாட்டேன், கட்சியிலும் ஆட்சியிலும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை, பொதுவாழ்வில் பங்குபெற வேண்டும் என்ற விருப்பம் இல்லை' என்ற உறுதி அளித்ததை மீறி சசிகலா நடந்துகொண்டிருப்பதாலும், சசிகலா பல்வேறு கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், கழகத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தி வருவதாலும் இன்று முதல் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்'' என்று அறிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிடட் மற்றொரு அறிக்கையில், ''ஜெயலலிதாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறி, ஜெ.வுக்கு துரோகம் செய்த, அவரது விருப்பத்துக்கு மாறாக, கழகத்திலிருந்து ஜெயலலிதாவால் பல ஆண்டு காலம் நீக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனையும், வெங்கடேஷையும் எவ்வித அதிகாரமும் இல்லாமல் மீண்டும் அதிமுகவில் இணைத்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது'' என்று மதுசூதனன் அறிவித்துள்ளார்.

மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை முகவரி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்