ஓசூரில் காரை வழிமறித்து 2.5 கிலோ தங்கம் வழிப்பறி

By செய்திப்பிரிவு

ஓசூரில் காரை வழிமறித்த கும்பல் கத்திமுனையில் மிரட்டி 2.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்டம், வட்டக்காடு தம்பிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் மாரியப்பன்(38). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகி றார். இந்நிலையில் கடந்த மாதம் 9-ம் தேதி மாரியப்பன், தனது நண்பர் சியோஜியுடன் காரில் சென்னையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்குச் சென் றார். அங்கு நித்யா என்பவரிடம் இருந்து 2.5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கி சென்றார்.

பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப் பள்ளி என்னுமிடத்தில் அதி காலை 3.30 மணியளவில் சென்ற போது, பின்னால் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்துள்ளது. மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, சியோஜி யிடம் இருந்த பாஸ்போர்ட், செல்போன் மற்றும் காரில் வைத்திருந்த ரூ.31 லட்சம் மதிப் புள்ள 2.5 கிலோ தங்கத்தை கொள் ளையடித்து தப்பிச் சென்றனர்.

ஆனால், பாஸ்போர்ட் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனதாக மட்டுமே சிப்காட் காவல்நிலையத்தில் சியோஜி புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. அதன்பின், நேற்று முன்தினம் இரவு, நகை கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாரியப்பன் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

24 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

12 mins ago

தொழில்நுட்பம்

3 mins ago

தமிழகம்

39 mins ago

மேலும்