சேலம்: 10,000 அடி உயரத்திலிருந்து விழுந்து பாராசூட் பயிற்சி பெண் பலி

By செய்திப்பிரிவு

சேலத்தில் சிறிய ரக விமானத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் இருந்து கீழே குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டபோது, பாராசூட் செயல் இழந்து பறக்காததால், இளம்பெண் கீழே விழந்து பலத்த காயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தியன் ஸ்கை டைவிங் பாராசூட் அசோசியேசன், வானில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கும் பயிற்சி அளித்து வருகிறது. கடந்த 25-ம் தேதி முதல் இந்த பயிற்சி நடந்து வருகிறது. இப்பியிற்சி மூன்று விதமாக நடத்தப்படுகிறது. 15,000 ரூபாய், 35,000 ரூபாய், 45,000 ரூபாய் ஆகிய கட்டணங்களில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்துள்ள, மாணவ, மாணவியர் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பெங்களூருவைச் சேர்ந்த ரம்யா (26) என்ற மாணவி, சிறிய ரக விமானத்தில் இருந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். விமானம் 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மாணவி ரம்யா பாராசூட்டை முதுகில் கட்டிக் கொண்டு கீழே குதித்தார். பாராசூட் விரிப்பதற்கான விசையை மாணவி ரம்யா அழுத்தியும், பாராசூட் விரியவில்லை. அதற்குள் மாணவி ரம்யா, தரையில் விழுந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

அங்கிருந்தவர்கள் ரம்யாவை மீட்டு, ஓமலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஒரு பாராசூட் செயல் இழந்த நிலையில், கட்டுப்பாடு அறையில் இருந்து தகவல் கொடுக்கப்படும்பட்சத்தில், மற்றொரு பாராசூட்டை பறக்க செய்து, உயிரைக் காப்பாற்றுவது வழக்கம். ஆனால், மாணவி ரம்யாவின் பாராசூட் செயல் இழந்த நிலையில், கட்டுப்பாடு அறையில் இருந்து தகவல் பரிமாற்றம் செய்யவில்லை. மற்றொரு பாராசூட்டை இயக்க முடியாமல், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக பயிற்சி மையத்தைச் சேர்ந்த நாகேஷ், ஆஸ்டிலா, மோகன் ராவ், ஐஸ்வர்யா யாதவ் ஆகிய 4 பேரை ஓமலூர் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்