வானூர்தி உற்பத்தி துறையில் பிரகாசமான தொழில் வாய்ப்புகள்: பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர் தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் வானூர்தி உற்பத்தி துறையில் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர் ஜி.சதீஷ் ரெட்டி கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத் தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் எஸ்ஏஇ இந்தியா (தெற்கு பிரிவு) அமைப்பு சார்பில் விமான வடிவமைப்பு போட்டியின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சதீஷ் ரெட்டி பேசியதாவது:

‘ஏரோநாட்டிக்ஸ்’ துறையில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ராணு வத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ‘ஏரோநாட் டிக்ஸ்’ தொடர்பாக படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) நிதி உதவி அளிக்கிறது.

மேலும் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ போன்ற திட்டங்களின் மூலம் புதிய தொழில்நுட்பத்தை கண்டறியும் மாணவர்கள் தொழில்முனைவோராக மாற முடியும். இந்தியாவில் வானூர்தி உற்பத்தி துறையில் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக டீன் டி.வி.கீதா, பதிவாளர் கணேசன், அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்