தீவுத்திடல் அருகே வானதி காரை மறித்து மோடிக்கு எதிராக கோஷம்

By செய்திப்பிரிவு

தீவுத்திடல் அருகே வானதி சீனிவாசனின் காரை வழி மறித்து பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் கோவையில் இருந்து நேற்று காலை ரயில் மூலம் சென்னை வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்து செல்வதற்காக டிரைவர் கோபிநாத் காரில் சென்ட்ரல் நோக்கி சென்றார். அந்த காரின் முன் பகுதியில் பாஜகவின் கொடி கட்டப்பட்டிருந்தது.

கார் தீவுத்திடல் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு திரண்டிருந்த சிலர் திடீரென வானதி சீனிவாசனுக்கு சொந்தமான காரை வழிமறித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், கோ‌ஷமிட்டனர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மோடிக்கு எதிராக கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்தி காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கார் குறிப் பிட்ட நேரத்தில் ரயில் நிலையத் துக்கு வராததால் வானதி சீனிவாசன் சிறிது நேரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தார். இதைத் தொடர்ந்து அரை மணி நேரத்துக்குப் பிறகு அவரது கார் வந்தது. அதன் பிறகு அனைத்து விவரங்களையும் டிரைவர் கோபிநாத், வானதி சீனிவாசனிடம் தெரிவித்தார். இதுகுறித்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வானதி சீனிவாசன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

35 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

58 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்