மக்கள் எதிர்ப்பால் சென்னை சென்றார் குன்னூர் எம்எல்ஏ?

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. இந்த தொகுதியில் கோத்தகிரியை சேர்ந்த சாந்தி ஏ.ராமு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இவர் அதிமுக வி.கே.சசிகலா அணிக்கு ஆதர வாகச் செயல்பட்டார். கடந்த 5-ம் தேதி சென்னை சென்றவர், கூவத் தூர் சொகுசு விடுதியில் தங்கி யிருந்தார்.

இந்த காலகட்டத்தில் தொகு தியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் சாந்தி ஏ.ராமுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்தி வந்தனராம்.

ஆனால், இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததால், குன்னூர், கோத்தகிரி மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்ட பொதுமக்கள் ஏமாற்ற மடைந்துள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. எம்எல்ஏவை தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, தனது சொந்த ஊரான கோத்தகிரியை அடுத் துள்ள அரவேணுவுக்கு எம்எல்ஏ வந்தார். இதையறிந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்குச் சென்று, அவரது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை திரும்பினார்

மேலும், பலர் அவரது தொலை பேசியில் தொடர்புகொண்டு கடு மையாகப் பேசினராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நேற்று காலை திடீரென சென்னைக்கு திரும்பிவிட்டாராம்.

இது தொடர்பாக, அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், நிலைமை சரியில்லாததால் சென்னை சென்று ஒரு வாரம் தங்கியிருந்து நிலைமை சீரானதும் தொகுதிக்கு திரும்புவதாக அவர் கூறியதாகவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

குன்னூர் எம்எல்ஏ சாந்தி ஏ.ராமுவை தொலைபேசியில் தொடர்புகொள்ள நாம் பல முறை முயற்சித்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இணைப்பிதழ்கள்

30 mins ago

க்ரைம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்