அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, கணவர், மகன் மீது பாலியல் புகார்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் மீது, இளம்பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள ஆமைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த பி.பானுமதி(22), இவரது அக்காள் ஜான்சிராணி ஆகியோர், வழக்கறிஞர்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமியிடம் அளித்த மனுவில் பானுமதி கூறியிருப்பதாவது:

சென்னை அண்ணாநகரில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வீட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அடுத்த 4 மாதங்களில் சசிகலா புஷ்பா தூத்துக்குடி மேயரானதால், தூத்துக்குடியில் உள்ள வீட்டுக்கு வேலை பார்க்க என்னை அழைத்து வந்துவிட்டனர்.

அவர் மேயராக இருந்த நேரத்தில் என்னை மிகவும் கொடு மைப்படுத்தினார். அவர் கூப்பிட்ட உடனே ஓடிவராவிட்டால் அசிங்க மாக திட்டி அடிப்பார். சில நேரங்க ளில் மதுபோதையில்தான் வீட்டுக்கு வருவார். சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ஆகியோர் என்னை பாலியல் ரீதியாக கொடுமைப்ப டுத்தினர். அவர்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுப்பார்கள்.

2013-ல் எனது அக்கா ஜான்சிராணியும் வேலைக்கு சேர்ந்தார். அவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

மீண்டும் சென்னையில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டுக்கு 2015-ம் ஆண்டு சசிகலா புஷ்பாவின் அம்மா கவுரி வந்தார். அப்போது அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தேன். அதனைத் தெரிந்து கொண்ட சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், தாயார் கவுரி ஆகியோர் என்னை அடித்து மிதித்தார்கள். தலைமு டியை கத்தரிக்கோலால் வெட்டி விட்டனர்.

பின்னர் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிவிட்டு, என்னையும், என் அக்காளையும் மிரட்டி வெளியே அனுப்பிவிட்டனர். சசிகலா புஷ்பா அதிகார பலத்தில் இருந்ததால், உயிருக்கு பயந்து இக்கொடுமைகளை யாரிடமும் சொல்லவில்லை. தற்போது அவர் மீது பலரும் புகார் கொடுத்து வருவதை அறிந்து, இந்த புகாரை கொடுத்துள்ளேன்.

எங்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ் வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

போலீஸில் புகார்

திருநெல்வேலி லஞ்ச ஒழிப் புத்துறை போலீஸில், இளைய பாரதம் அமைப்பின் தலைவர் ஏ.வெங்கடேஷ் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந் தத்துக்காக சசிகலா புஷ்பாவிடம் ரூ. 20 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால், அவர் ஏமாற்றிவிட்டதா கவும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ச.ராஜேஷ் என்பவர் போலீஸில் புகார் கூறியுள்ளார். எனவே லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனைத்து துறைகளின் ஒப்பந்தப் பணிகள் குறித்தும் விசாரணை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

2 mins ago

க்ரைம்

37 mins ago

சுற்றுச்சூழல்

43 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்