திருப்போரூரில் திருவள்ளுவர் சிலை திறக்க அனுமதி மறுப்பு: சிலை பீடம் நொறுக்கப்பட்டது மன்னிக்க முடியாத செயல்: வைகோ கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

திருப்போரூரில் திருவள்ளுவர் சிலை திறக்க அனுமதி மறுப்பு, சிலை பீடம் நொறுக்கப்பட்டது மன்னிக்க முடியாத செயல் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சி மாட்டம் - திருப்போரூர் பேரூராட்சியில், சமுதாய நலக்கூடம் அருகில் உள்ள சாலையோர பூங்காவுக்கு ‘திருவள்ளுவர் பூங்கா’ என்று பெயரிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்பூங்காவில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு தமிழ்ச் சங்கம் சார்பில், பேரூராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு 2014 இல் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் இயற்றி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி உள்ளது.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பீடம் அமைத்து, சிலை நிறுவி மூடி வைத்து இருந்தனர். தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் சிலையை திறப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் கhத்திருந்தது.

இந்நிலையில், தமிழ்ச் சங்கத்தினர் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து திருவள்ளுவர் சிலை நிறுவுவது குறித்து கேட்டபோது, மீண்டும் பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கூறி உள்ளார்.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேரூராட்சி மன்றத்தில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்க அரசின் அனுமதி கிடைக்கும் என்று திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகமும், தமிழ்ச் சங்கமும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று செப்டம்பர் 3ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு செங்கல்பட்டு கோட்டாட்சியரும், மாமல்லபுரம் கhவல்துறை துணை கண்கhணிப்பாளரும் கhவல்துறையினர் புடை சூழச் சென்று ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் பீடத்தை உடைத்து, திருவள்ளுவர் சிலையை தூக்கிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. சிலை அங்கு காணவில்லை.நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் பெருமுயற்சியால், கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு முக்கடல் சங்கமிக்கும் குமரியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கங்கை கரை பூங்காவில் சிலை வைத்திட மதவெறி கும்பல் எதிர்ப்புத் தெரிவித்ததால், சிலை அகற்றப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவாக, உத்தரகாண்ட் முதலமைச்சர் திருவள்ளுவர் சிலை உரிய இடத்தில் மிகச் சிறப்பாக அமைக்கப்படும் என்று அறிவித்து இருக்கின்றார்.

ஆனால் தமிழ்நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்படுவது பெருத்த அவமானம் அகும்.

பாரதி பாடியவாறு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு அவமதிப்பு ஏற்படுத்திய ஜெயலலிதா அரசின் இத்தகைய செயல் மன்னிக்க முடியாத கடும் கண்டனத்திற்கு உரியதாகும். திருப்போரூர் பேரூராட்சி மன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, திருவள்ளுவர் பூங்காவில் இடிக்கப்பட்ட பீடத்தையும் மீண்டும் கட்டி எழுப்பி, திருவள்ளுவர் சிலையையும் நிறுவி திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

54 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்