அடுக்கு மாடிக் குடியிருப்பில் பூனை வேட்டை: 14 பூனைகளை மீட்ட புளுகிராஸ் அமைப்பினர்

By செய்திப்பிரிவு

அடுக்கு மாடிக் குடியிருப்பில் பூனை வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 14 பூனைகள் மீட்கப் பட்டன. இந்தச் சம்பவம் தண்டையார்பேட்டையில் பர பரப்பை ஏற்படுத்தியது.

தண்டையார்பேட்டையில் தனி யாருக்குச் சொந்தமான பிரபலமான அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு பூனைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இது குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து பூனை தொந்தரவை தடுப்பது எப்படி என்பது குறித்து அடுக்கு மாடிக் குடியிருப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், அனைத்து பூனைகளையும் பிடித்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பூனைப் பிடிப் பவர்கள் 5 பேர் நேற்று மதியம் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவன் சிறுவன். வந்தவர்களிடம் பிடிபடும் பூனை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.250 தரப்படும்” எனக் குடியிருப்பில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பூனைப் பிடிப்பவர்கள் சணல் சாக்குடன் அந்தக் குடியிருப்பு முழுவதும் அலந்து பூனையை விரட்டிப் பிடித்தனர். உயிர் பயத்தில் அலறி தப்பியோடியப் பூனைகளையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இப்படி, அவர்களிடம் 14 பூனைகள் சிக்கிக் கொண்டன. இதற்கிடை யில் புளு கிராஸ் அமைப்பின ருக்கு சட்டவிரோதமாக பூனை பிடிக்கும் தகவல் கிடைத்தது.

அவர்கள் சம்பந்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு விரைந்து வந்து பிடிபட்ட பூனை களை மீட்டனர். தொடர்ந்து பூனை பிடித்தவர்களை தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக பூனையைப் பிடிக்க சொன்ன வர்களையும், பூனை பிடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து எந்த வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்டையார்பேட்டை போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்