இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் ராமேசுவரம் மீனவர் பலி: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட் ஜோ(21) என்ற மீனவர் பலியான தற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறி யிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்):

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கு தல் நடத்தியது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்கு தல் கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக மீனவர்கள் பிரச்சினை யில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியமாகவே இருந்து வருகின்றன. இலங்கை தூதரை நேரில் அழைத்து பகி ரங்க எச்சரிக்கை விடுக்க வேண் டும். கொல்லப்பட்ட மீனவர் குடும் பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல, இந் திய அரசும் பொறுப்பேற்க வேண் டும். தமிழ்நாடு காங்கிரஸ் அறக் கட்டளை சார்பில் பிரிட்ஜோ குடும் பத்துக்கு ரூ.1 லட்சமும், காய மடைந்த மீனவருக்கு ரூ.10 ஆயிர மும் வழங்கப்படும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

ராமேசுவரம் மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோர வேண் டும். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 கோடியை இலங்கையிடம் இருந்து அபராதமாக பெற்றுத் தர வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலை வர்):

இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. பலியான மீனவர் குடும்பத்துக்கு இலங்கையிடம் இருந்து ரூ.20 லட்சம் நஷ்டஈடு பெற்றுத் தர வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க மத்திய அரசு எந்த உருப்படியான நடவடிக்கை யும் எடுப்பதில்லை. இதன் விளை வாகவே ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத் துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர்):

தமிழக மீனவர்களை தொழில் செய்யவிடாமல் இலங்கை கடற் படை உள்நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறது. தமிழக மீனவர் களை மத்திய அரசு இந்திய குடி மகனாக கருதவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

அன்புமணி (பாமக இளைஞ ரணித் தலைவர்):

பிரிட்ஜோ கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதற்கு காரணமான இலங்கை கடற்படையினரை கைது செய்து ஒப்படைக்குமாறு கோர வேண்டும். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் விசிக தலைவர்:

கச்சத் தீவு அந்தோணியார் திருவிழா நடை பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல் லப்பட்டுள்ளார். திருவிழாவில் தமிழக மீனவர்களைப் பங்கேற்க விடாமல் செய்வதே அவர்களின் உள்நோக்கம் என்பது தெளிவா கிறது. இதனை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமிழினத் துக்கு செய்யும் துரோகமாகும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்):

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என மோடி யும், வெளியுறவுத் துறை அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜும் உறுதி அளித்ததை மறந்துவிட்டனர். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத் துக்கு மத்திய அரசு ரூ. 1 கோடி வழங்க வேண்டும்.

சரத்குமார் (சமக தலைவர்):

இலங்கை கடற்படையின் துப்பாக் கிச் சூட்டுக்கு ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ பலியாகி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. நீண்ட காலமாக இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

ஈஸ்வரன் (கொமதேக மாநில பொதுச்செயலாளர்):

இலங்கை கடற்படையினரால் ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை யும், படகுகளையும் சிறைப்பிடிக் கும்போது தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி வருகிறார்கள்.

மத்திய அரசு நிரந்தர தீர்வு கண்டு தமிழக மீனவர் களை காப்பாற்றாவிட்டால், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கக் கூடாது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்டோர் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்