வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி: 200 பேர் பங்கேற்காததால் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு 1,638 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 200 பேர் பங்கேற்கவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 256 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் 1,638 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை, தேர்தல் பொது பார்வையாளர் பிரவீன் பிரகாஷ், மாவட்ட தேர்தல் அலு வலர் தா.கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆகியோர் பார்வையிட்டனர். அப் போது, புதிதாக தேர்தல் பணிக்கு வந்திருப்போர் குறித்தும், ஏற் கெனவே தேர்தல் பணிக்கு வந்து, சந்தித்த சிக்கல்கள் குறித்தும் கேட் டறிந்தனர். இந்த பயிற்சி வகுப் பில் 200 அலுவலர்கள் பங் கேற்கவில்லை என தேர்தல் அலுவல கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் நிருபர் களிடம் கூறும்போது, இந்த பயிற்சியில் தேர்தல் நடைமுறைகள் குறித்த பொதுவான வீடியோ காட்சி காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது. அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட பெரும்பாலான அலுவலர்கள் பயிற்சிக்கு வந்துவிட்டனர். தேர்தல் பணிக்கு வராமல் இருப்பது குற்றம். பணிக்கு வராத அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். நியாயமான காரணத்தை தெரிவித்தால், அவர்கள் அடுத்த பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.

வாக்குச் சீட்டு முறை

வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ள நிலையில், 82 மனுக்கள் ஏற்கப்பட்டுள் ளன. வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அவகாசம், திங்கள் கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னரே போட்டியிடும் வேட்பாளர் எத்தனைபேர் என்ற விவரம் தெரியவரும். அப்போது தான் வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதா, வாக்குச் சீட்டை பயன்படுத்துவதா என் பது குறித்து முடிவு செய்யப் படும்.

ரூ.7 லட்சம் பறிமுதல்

தேர்தல் விதிமீறல்கள் தொடர் பாக 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பறக்கும் படை மற்றும் நிலையான குழுக்கள், வீடியோ குழுக்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதுவரை ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். தேவைப் பட்டால் பறக்கும் படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தேர்தல் நியாயமாக நடத்துவதற் கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்