பழநி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்: குழந்தையை மீட்க திருப்பூர் சென்றது தனிப்படை

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணின் ஒன்றரை வயது குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். குழந்தையை மீட்க தனிப்படையினர் திருப்பூர் சென்றுள்ளனர்.

பழநி அருகே அ.கலை யம்புத்தூரை சேர்ந்த ஒண்டி வீரன் மனைவி தேவிகா. இவர்களுக்கு பிரகாஷ் (2), பிரேம்குமார் (1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். காய்ச்சல் காரணமாக தேவிகா பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தேவிகாவுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலையில் கண்விழித்த தேவிகா தனது இளைய மகன் பிரேம்குமாரை காணாமல் தேடியுள்ளார். மருத்துவமனை வளாகத்துக்குள் எங்கும் காணாதது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின்பேரில் பழநி போலீஸாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

பழநி டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தேவிகா அனு மதிக்கப்பட்டிருந்த வார்டில் நெஞ் சுவலிக்கு சிகிச்சை பெற்றுவந்த சாகிதாபேகம் (45) என்பவர் நேற்று அதிகாலை முதல் காணவில்லை எனத் தெரியவந்தது. இந்நிலையில் மனைவியை சந்திக்க மருத்துவமனைக்கு சாகிதா பேகத்தின் கணவர் சம்சுதீன் வந்துள்ளார். அவர் தனது மனைவியைக் காணவில்லை என்று கூற போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

தனது மனைவி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என சம்சுதீன் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் குழந்தையை மீட்க தனிப்படையினர் திருப்பூருக்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்