எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: செப்.27-க்குள் நடத்த நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ராம்குமாரின் உடல் பிரேத பரி சோதனையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவரின் முன்னிலையில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மரணம டைந்தார். அவர், மின் வயரை கடித்து தற்கொலை செய்து கெ ாண்டதாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. 4 பேர் கொண்ட அரசு மருத்துவர்கள் தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

பிரேதப் பரிசோதனையில் தங்களது தரப்பில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் சம்பத் கு மாரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகி யோரைக் கொண்ட அமர்வில் விசாரிக்கப் பட்டது.

ராம்குமாரின் பிரேதப் பரி சோதனை குழுவில் தனியார் மருத்துவரை அனுமதிக்கலாம் என நீதிபதி ஹூலுவாடி ஜி.ர மேஷூம், தனியார் மருத்து வருக் குப் பதிலாக அரசு மருத்து வரை மனுதாரர் தரப்பின் விருப்பம் பே ால நியமிக்கலாம் என நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் கருத்து தெரிவித்தனர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்த தால் இறுதி முடிவு எடுக்க 3-வது நீதிபதியாக என்.கிருபாகரன் நியமிக்கப்பட்டார். அவரது முன்பு நேற்று காலை வழக்கு விசாரிக் கப்பட்டது.

3-வது நீதிபதி உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன், நேற்றிரவு தனது சேம்பரில் வைத்து தீர்ப்பை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவில் தனியார் மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தமிழக அரசு நியமித்துள்ள அரசு மருத்துவர்கள் குழுவுடன் 5-வது மருத்துவராக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவரை அழைத்து அவர் முன்னிலையில் செப்டம்பர் 27-க்குள் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று முறையீடு

நீதிபதிகளின் மாறுபட்ட உத்தரவுகளை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் வெள்ளிக்கிழமை (இன்று) முறையிட உள்ளதாக ராம்குமாரின் தந்தை தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்