காங். உறுப்பினர் வசந்தகுமாருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமாருக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் கண்டனம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. முன்னதாக அவை தொடங்கியதும் கேள்வி நேரத்தின்போது, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் சில கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மானியக் கோரிக்கை விவாதத்தில் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் பேசினர். பகல் 12.03 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா பேரவைக்கு வந்தார். அதிமுக உறுப்பினர் பேசி முடித்ததும் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னதாக, பேரவைத் தலைவர் பி.தனபால் பேசியதாவது:

காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார், கேள்வி நேரத் தின்போது மின்துறை தொடர்பான சில கேள்விகளை எழுப்பி னார். அதன்பின், மானியக் கோரிக்கை மீது பேச வாய்ப்பு கேட்டிருந்தார். நானும் அனுமதி அளித்திருந்தேன். ஆனால், வெளியில் சென்று பேச அனுமதிக்கவில்லை என கூறி மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளார். இது அவை நடவடிக்கைகளுக்கு உகந்ததல்ல. அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அதை பதிவு செய்கிறேன்.

இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்