சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 146 வழக்கறிஞர்கள் கைது

By செய்திப்பிரிவு

வழக்கறிஞர் சட்டத்தில் செய்யப் பட்டுள்ள திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 146 வழக்கறிஞர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களை வாபஸ் பெற வலியு றுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழு வதும் நேற்று வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (எம்.ஹெச்.ஏ.ஏ.) சார்பில் செய லாளர் அறிவழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்துக்குள் கோஷ மிட்டவாறு சென்றனர். பின்னர் என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக பாரிமுனைக்கு சென்று கடற்கரை ரயில் நிலையத்துக்குள் செல்ல முற்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் போலீ ஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி தலைமையில் 6 பெண்கள் உட்பட 106 பேர் கைது செய் யப்பட்டனர். இதேபோல் ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 40 வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் மதியத்துக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

12 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்