ஸ்டாலின் 62-வது பிறந்த நாள்: சிதம்பரம், வாசன், ரஜினி வாழ்த்து

By செய்திப்பிரிவு

தனது 62-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் மு.க.ஸ்டாலின். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தனது 62-வது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடினார். காலையிலேயே கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி, தாய் தயாளுவைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், தனது வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினர், சகோதரிகள் செல்வி, கனிமொழி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மமக ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக நிர்வாகிகள், மாவட்டச் செய லாளர்கள், இளைஞரணியினர் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர், சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச் சர் திருநாவுக்கரசர், உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

இணைய தளம் புதுப்பிப்பு

பிறந்தநாள் விழாவில் www.mkstalin.in என்ற தனது புதுப்பிக்கப்பட்ட இணைய தளத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்