சென்னை திரும்பினார் விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

மலேசியா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பினார். கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 18-ம் தேதி மலேசியா சென்றார். அங்கு நடந்த நண்பர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். மேலும் அங்குள்ள நண்பர்களுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மலேசியாவில் தங்கியிருந்த விஜயகாந்தை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலர் சந்தித்து, திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் விஜயகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் பேட்டி கொடுக்க மறுத்து வேகமாக சென்றுவிட்டார்.

விருப்ப மனு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது.

பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக

தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

43 mins ago

ஜோதிடம்

18 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்