தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில், தமிழக வாகனங் கள் மீது கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கிச் செல்லும் அனைத்து தமிழக பதிவெண் கொண்ட லாரிகள், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.

தமிழக எல்லையான ஜூஜூவாடி வரையிலும், கர்நாடகா எல்லை யான அத்திப்பள்ளி வரையிலும், அந்தந்த மாநில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் சுமார் 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கர்நாடகா வில் இருந்து வரும் தமிழர்கள், காவல்துறை வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர்.

தருமபுரி

கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட லாரி கள் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்கள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில், கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகள் நிறுத்தப்பட்டு 20 லாரிகள் உள்ளிட்ட வாகனங் கள் சேர்ந்ததும், அந்த வாகனங் களுக்கு முன்பும், பின்பும் போலீ ஸார் வாகனத்தில் பாதுகாப்புடன் செல்கின்றனர். காரிமங்கலம் வரை பாதுகாப்புடன் கொண்டு சென்று விடப்படுகின்றன.

கரூரில் லாரிக்கு தீ வைப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் உள்ள ஒரு நிறுவனத் துக்குச் சொந்தமான போர்வெல் அமைக்கும் லாரி, திண்டுக்கல் லுக்கு புறப்பட்டது. கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த இந்த லாரி, அங்கு உள்ள லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல் பங்க்கில் நிறுத்தப்பட்டிருந்தது.

கர்நாடக மாநில பதிவெண் கொண்ட இந்த லாரிக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் தீ வைத்தது. மேலும், லாரி ஓட்டுநர் சாமிநாதனை(38) தாக்கிய அக்கும்பல், அங்கிருந்து தப்பிவிட்டது. இதில் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, லாரி உரிமையாளர் பழனிவேல்(53) அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

உலகம்

34 mins ago

ஆன்மிகம்

32 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்