உயிரிழந்த விவசாயிகளுக்காக பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்க்கலாம்: இயக்குநர் தங்கர் பச்சான் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

உயிரிழந்த விவசாயிகளுக்காக இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்க்கலாம் என்று திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமக்கெல்லாம் உணவளித்து உயிரையும் உடலையும் காப்பாற் றும் விவசாயிகளும் நம்மைப் போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் அடுக்கடுக்காக உயிரிழக்கும் விவசாயிகள் பற்றிய செய்திகளை நாம் கண்டுகொள்ளாமல் போகிறோம். விவசாயிகள் வீட்டில் எழும் அழுகுரல் மட்டும் நமக்கோ, கேட்க வேண்டியவர்களுக்கோ கேட்கவே இல்லை.

நஷ்டம் வரும் என்று தெரிந்தே விவசாயிகள் விவசா யம் செய் கிறார்கள். கடன் வாங்கியவர் களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம், எதிர்காலத்தில் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்து மானத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டும் அதிர்ச்சியிலும் விவசாயிகள் உயிரிழக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தால் அதிர்ச்சியால் இறந்தவர்களுக்கு அதிமுக ரூ.10 லட்சம் இழப்பீடு நிதி தருகிறது. ஆனால். உயிரிழந்த விவசாயிகளுக்கு தரப்படும் நிதி ரூ.3 லட்சம். இதுதான் அரசாங்கம் விவசாயிகளின் உயிருக்கு தரும் விலை. விவசாயிகளின் உயிரும் போய் அவர்களின் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் கிடைக்காத நிலையில், அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.

நம்முடைய குழந்தைகளை டாக்டர்களாகவும், இஞ்ஜினீயர் களாகவும் ஆக்குவதற்கு மட்டுமே தயார்படுத்துகிறோம். எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை. விவசாயிக்கு மரியாதை கிடையாது.

நமக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் வகைவகையான உணவுகள் வேண்டும். புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து தொலைக்காட்சி பார்த்து, புதுப்புது சினிமா பார்த்து, விதவிதமாக படம் பிடித்துக்கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண் டும். காளையை அடக்க வேண்டிய வர்கள் மடிந்து கொண்டிருக் கிறார்கள். ஜல்லிக்கட்டில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமே லாவது விவசாயின் அழுகுரல் உலகத்துக்கு கேட்கட்டும். உயிரி ழந்த விவசாயிகளுக்காகவும் சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண் டாடாமல் தவிர்க்கலாம். இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

உயிரிழந்த விவசாயி களுக்காகவும் சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்